பொத்தனூரில் ரூ.60 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு

பொத்தனூர் தேவராய சமுத்திரம் காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு.
பரமத்தி வேலூர்,நவ.30- பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் தேவராய சமுத்திரம் காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான பொத்தனூர் கிராமத்தில் 12.50 ஏக்கர் புன்செய் நிலங்களை பரமத்தி நீதிமன்ற உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி நேரடி மேற்பார்வையில் நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் சுவாமிநாதன், ஆலய நிலங்கள் தாசில்தார் சுந்தரவல்லி,துணை ஆட்சியர் (ஓய்வு) குப்புசாமி, செயல் அலுவலர் கிருஷ்னராஜ்,சிறப்பு பணி ஆய்வாளர்கள் ஜனனி,நவீன்ராஜ், சந்தியா,கனகராஜ்,கீதாமணி மற்றும் வடிவுக்கரசி உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முழு சுவாதீனத்தில் எடுக்கப்பட்டது. இந் நிலங்களின் தற்காலிக சந்தை மதிப்பு சுமார் ரூ.60 கோடி எனவும், கோவிலுக்கு வருவாய் ஈட்டிடும் வகையில் இந்திலங்களை உடனடியாக பொது ஏலத்தில் கொண்டு வர இணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story