ராமநாதபுரம் பலசரக்கு கடைகளில் 60 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் இருவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் காவல் சரகத்துக் குள்பட்ட பேரையூர் பலசரக்கு, பெட்டிக் கடைகளில் தடை செய் யப்பட்ட புகையிலைப் பொருள் கள் விற்கப்படுவதாக போலீஸா ருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அந்தப் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளிலும் காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகம், காவல் ஆய்வாளர் ஜான்சிராணி உத்தரவின் பேரில், உதவி ஆய் வாளர் செல்வராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், செந்தூர்பாண்டி உள்ளிட்ட போலீஸார் சோதனையில் ஈடு பட்டனர். அப்போது, பேரையூர் நாடார் தெருவைச் சேர்ந்த வன்னி முத்து மகன் காமராஜ் (63), செல்லையா மகன் செல்லப்பாண்டி (45) ஆகிய இருவரது பலசரக்கு கடைகளில் 60 கிலோ புகையிலைப் பொருள் கள் இருந்தது தெரிய வந்தது. புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
Next Story




