வெள்ளகோவில் அருகே 60 கிலோ புகையிலை பொருட்களை காரில் கடத்தியவர் கைது

வெள்ளகோவில் அருகே 60 கிலோ புகையிலை பொருட்களை காரில் கடத்தியவர் கைது வெள்ளகோவில் காவல்துறை நடவடிக்கை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த முத்தூர் பகுதிகளில் புகையிலை பொருட்கள் காரில் விற்பனைக்காக கொண்டு வரும் வெள்ளகோவில் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து காவல்துறையினர் முத்தூர் - ஈரோடு சாலை தண்ணீர் பந்தல் பேருந்து நிறுத்தம் பகுதிகளில் தீவிர வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது காரில் இருந்தவர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே காரை தீவிரமாக சோதனை செய்தபோது உள்ளே புகையிலை பொருட்கள் கடத்தி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது கண்டறிந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் காரில் வந்த தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த ரத்தின பாண்டி (வயது 62) என்பவரை கைது செய்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 60 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் எங்கு தயாரிக்கப்படுகிறது எங்கு இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அவ்வப்போது கண்துடைப்பிற்கு குட்கா விற்பனை செய்யும் பெட்டிக்கடை போன்ற சிறிய கடைகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதியப்படுகின்றது.தற்போது வெள்ளகோவில் பகுதியில் 60 கிலோ குட்கா காரில் கடத்தி வரப்படும் பொழுது சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்டை மாநிலத்திற்கு வாடகைக்கு செல்லும் கார்,வேன்,லாரி,ஆம்புலன்ஸ் ஆகியவற்றில் பதுக்கி கொண்டு வரப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்வதாகவும் இதனால் பள்ளி , கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை சீரழிவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Next Story