வங்கி ஊழியர் தவறால் 60 ஆயிரம் திரும்ப பெற வாடிக்கையாளர் அலைச்சல்!

X
கோவை சேரன் நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், நிசாந்த் என்ற வாடிக்கையாளர் 60 ஆயிரம் ரூபாயை நீதிமன்ற தேவைக்காக டி.டி எடுக்க முயன்றபோது, வங்கி ஊழியர்கள் தவறான பரிவர்த்தனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவசர பணம் தேவையிருந்த நிசாந்த், தொகையை திரும்ப வழங்க கோரியபோது, “இரண்டு, மூன்று நாட்கள் காத்திருங்கள்” என ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், “வங்கி தவறுக்கு நான் ஏன் காத்திருக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார். தான் சந்தித்த அனுபவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி நிசாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
Next Story

