சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனை செய்த குற்றவாளி கைது : 60 கிலோ குட்கா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்

X
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் உத்தரவின் படி, குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் காவலர்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், புதன்கிழமையன்று தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு உட்கோட்டம், பாப்பாநாடு காவல் நிலையத்திற்குட்பட்ட கண்ணுக்குடி மையப் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசியத் தகவலின் படி, பாப்பாநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகேஷ் சக்தி தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அம்மாபேட்டை, வளையல்கார செட்டியார் தெருவைச் சேர்ந்த வெற்றிவேல் (வயது-36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 60 கிலோ குட்கா மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியற்றை பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்தமைக்காக பாப்பாநாடு காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் முகேஷ் சக்தி தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டினார்.
Next Story

