இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்: 2பேர் கைது!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்னர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்னர்.  தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, புளி, விரலி மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள், போதைப் பொருள்கள் கட்டத்தப்படுவதை தடுக்க போலீசார் தொடா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் திரேஸ்புரம் பகுதியில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.  அதன்பேரில், காவல் ஆய்வாளா் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளா்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் கோவிந்தராஜ், இருதயராஜ் குமார், இசக்கி முத்து, காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்டோா் திரேஸ்புரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த மினிலாரியில் இருந்து மா்ம நபா்கள் சிலா், சில மூட்டைகளை படகில் ஏற்ற முயன்றனராம்.  போலீசாரைக் கண்டதும், மூட்டைகளை போட்டுவிட்டு சிலா் தப்பி ஓடிவிட்டனா். அவா்களிடமிந்து 10 மூட்டைகளில் இருந்த வலி நிவாரண மாத்திரகளை போலீசார் பறிமுதல் செய்தனா். இதன் இலங்கை மதிப்பு ரூ.60 லட்சம். இது தொடர்பாக திரேஸ்புரம் ஜவஹர் மகன் ஜெனிஸ்டன்(20), அன்னை தெரசா காலனி ஜேம்ஸ்  மகன் அனிஸ் (25), ஆகிய 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் வலி நிவாரணி மாத்திரைகளை கடத்த முயன்ற டபுள் எஞ்சின் பொருத்தப்பட்ட பைபர் படகையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story