நாமக்கல் மாரத்தான் போட்டி ,600 பேர் பங்கேற்பு.

X

நாமக்கல், மார்ச் 17 நாமக்கல்லில் மகளிர் தினத்தை மகளிர் மகளிர் பாதுகாப்பை வலியுறுத்தி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட தலைமை செய்தியாளர்கள் சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
நாமக்கல், மார்ச் 17 நாமக்கல்லில் மகளிர் தினத்தை மகளிர் மகளிர் பாதுகாப்பை வலியுறுத்தி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட தலைமை செய்தியாளர்கள் சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட தலைமைச் செய்தியாளர்கள் சங்க தலைவர் ராஜு தலைமை வகித்தார். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து 600 மீட்டர், 2 கிலோமீட்டர், 3 கிலோ மீட்டர் , 5 கிலோமீட்டர், 8 கிலோ மீட்டர் மற்றும் கிலோ மீட்டர் தூரம் ஆண் பெண் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. அடுத்தடுத்த போட்டிகளை சாரா குரூப்ஸ் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதேவி மோகன், அக்க்ஷயா மருத்துவமனை மருத்துவர் ஷியாம்சுந்தர், நோபல் என்ட்ரி மற்றும் டெல்ட்டா நிறுவன இயக்குநர் தங்கராஜ், முத்தாயம்மாள் கல்லூரி முதல்வர் மோகன்பிரபு ஆகியோர் தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினர். போட்டியில் பங்கேற்ற வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெற்றன. வெற்றி பெற்ற வீரர்களுக்கு மெடல்,சான்றிதழ்கள் மற்றும் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டன. இப்போட்டியில் சுமார் 600 க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
Next Story