மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தின் கீழ் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சுயம்பு வீரப்பயனார் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

கொடியேற்றம்
தேனி அல்லிநகரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த அருள்மிகு சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ஒன்றாம் தேதியை முன்னிட்டு சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது முன்னதாக உற்சவர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் அமர்ந்தபடியே அல்லிநகரம் கோவிலில் இருந்து ஊர்வலமாக வீரப்ப அய்யனார் கோயிலுக்கு வருகை தந்தார் பின் கோயிலில் உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது தொடர்ந்து கொடி மரத்திற்கு வஸ்திரம் கட்டி மலர்களை தூவி தீபாராதனைகள் காட்டப்பட்டது இதில் தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வீரப்ப அய்யனாரை தரிசித்துச் சென்றனர்
Next Story