மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிலம்பம் சாகசம் செய்து அசத்தல்.....

X
சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிலம்பம் சாகசம் செய்து அசத்தல்..... ஆடவர் பிரிவில் தூத்துக்குடி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை... சிவகாசியில் மாநில அளவிலான சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. சென்னை, கோவை, திருப்பூர், சேலம் நெல்லை ராமநாதபுரம் தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓபன் பிரிவுகளில் இளைஞர்கள் என க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பள்ளிக் கல்லூரி மாணவ மாணவியருக்கு வயது பிரிவுகளின் அடிப்படையில் மற்றும் ஓபன் பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, வால் சண்டை, சுருள்வாள் வீச்சு, வேல் கம்பு, மான் கொம்பு, அலங்கார சிலம்பம் உள்ளிட்ட முறைகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. தனித்திறன் மற்றும் குழு போட்டிகளில் வீரர் வீராங்கனைகள் சிலம்ப சாகசம் செய்து அசத்தினர். இதில் ஆடவர் குழு போட்டியில் தூத்துக்குடி கானிஸ்கா சிலம்பம் அகாடமி அணியும், திருச்சி ஏகலைவன் தற்காப்பு கலை அணி இரண்டாம் இடம் பிடித்தது. இதேபோல், மகளிர் அணியில் திருச்சுழி பனையூர் பாலா தற்காப்பு கலை அணி முதலிடமும், பண்ணியம்பட்டி பி கே என் சிலம்பக்கலை அணி இரண்டாம் இடமும் பிடித்து பரிசு கோப்பைகளை வென்றனர்.
Next Story

