நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.6.00 இலட்சம் நிவாரண நிதிக்கான காசோலையினை வழங்கிய எம்.பி கே.ஆர். என்.ராஜேஷ்குமார

X
NAMAKKAL KING 24X7 B |22 Sept 2025 7:17 PM ISTதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மின்னக்கல் கிராமத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.6.00 இலட்சம் நிவாரண நிதிக்கான காசோலையினை வழங்கினார்.நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மின்னக்கல் கிராமத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , மாவட்ட ஆட்சியர் தலைமையில், நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.6.00 இலட்சம் நிவாரண நிதிக்கான காசோலையினை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மின்னக்கல் கிராமம், வாய்க்கால்பட்டறை பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவரின் மகன்களான செல்வன்.நிஷாந்த் (வயது 23) மற்றும் செல்வன்.பிரசாந்த் (வயது 19) ஆகிய இருவரும் சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், பைரோஜி அக்ரஹாரம் குரூப் கிராமத்தில் உள்ள அரசம்பாளையம் மலை அடிவாரத்தில் கடந்த 20.9.2025 அன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் மழைநீர் தேங்கியுள்ள குட்டையில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மேற்படி, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.00 இலட்சம் என ரூ.6.00 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.அதனடிப்படையில் இன்றைய தினம் (22.09.2025) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நீரில் மூழ்கி உயிரிழந்த செல்வன் நிஷாந்த் மற்றும் செல்வன். பிரசாந்த் ஆகியோரின் வீட்டிற்கு நேரில் சென்று, அவர்களின் பெற்றோரான சுப்பிரமணி, வசந்தா ஆகியோரிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.6.00 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
Next Story
