விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் எத்துப்பல் கொண்ட பள்ளி மாணவர்கள் 600 பேருக்கு இலவசமாக Braces எனப்படும் கிளிப் சிகிச்சை வழங்கியுள்ளது பாராட்டை பெற்றுள்ளது....*

விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் எத்துப்பல் கொண்ட பள்ளி மாணவர்கள் 600 பேருக்கு இலவசமாக Braces எனப்படும் கிளிப் சிகிச்சை வழங்கியுள்ளது பாராட்டை பெற்றுள்ளது....*
X
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் எத்துப்பல் கொண்ட பள்ளி மாணவர்கள் 600 பேருக்கு இலவசமாக Braces எனப்படும் கிளிப் சிகிச்சை வழங்கியுள்ளது பாராட்டை பெற்றுள்ளது....*
தமிழகத்தில் முதன் முறையாக விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் எத்துப்பல் கொண்ட பள்ளி மாணவர்கள் 600 பேருக்கு இலவசமாக Braces எனப்படும் கிளிப் சிகிச்சை வழங்கியுள்ளது பாராட்டை பெற்றுள்ளது.... விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட சுகாதார துறையினர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்த ஆய்வின் போது பெரும் பாலான மாணவ மாணவியர் மத்தியில் இருக்கும் தீராத பிரச்சனையாக எத்துப்பல் பாதிப்பு இருந்துள்ளதை அறிந்தனர். மேலும் மாணவர்களில் சிலர் அதனை பெரிய குறையாக நினைத்து சற்று மன ரீதியான பாதிப்புகளுடன் இருந்துள்ளனர். இதையறிந்த மாவட்ட சுகாதார துறையினர் ஆட்சியர் ஜெயசீலனிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து சற்றும் தயங்காத மாவட்ட ஆட்சியர் சுகாதார துறை பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி சிஎஸ்ஆர் நிதி உதவியோடு 'மலரும் புன்னகை' திட்டம் என்ற புதிய திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கினர். இந்த திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எத்துப்பல் பாதிப்பு கொண்ட மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிஎஸ்ஆர் நிதியில் முற்றிலும் இலவசமாக விலை உயர்ந்த Braces எனப்படும் கிளிப் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக 600 மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களில் 302 பேருக்கு மதுரையில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் வைத்து பல் கிளிப் பொருத்தி மாத மாதம் முறையாக பரிசோதனைக்கும் இலவசமாக அழைத்து செல்லப்பட்டு வருகிறது. மாணவ மாணவியரின் நலனில் அக்கறையுடன் முன்னெடுக்கப்பட்டு உள்ள இந்த முயற்சியின் பலன் தமக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தனது எக்ஸ் தல பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் மருத்துவமனை களில் சுமார் ரூ.30,000 வரை 1 லட்சம் வரை ஆகும் செலவாகும் இந்த உயர்தர சிகிச்சையை இலவசமாக கிடைக்க உதவிய மாவட்ட ஆட்சி இருக்கும் தமிழக அரசிற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றனர் மேலும் இந்த திட்டம் மூலம் பயன் பெரும் பள்ளி மாணவ மாணவியர். பெரும்பாலும் பட்டாசு ஆலைகளில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள் இந்த திட்டத்தில் பயன் பெற்றுள்ள நிலையில், இது போன்ற சிகிச்சையை தங்களது ஏழ்மை நிலையில் நினைத்துக் கூட பார்த்ததில்லை எனவும் பட்டாசு ஆலைகளில் வேலை பார்த்து குறைந்தபட்ச கூலி பெறும் தங்களது பெற்றோர்களால் இது போன்ற உயர்தர சிகிச்சையை அழிக்க முடியாததை மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் கிடைக்கப் பெற்றுள்ளதாக நெகிழ்ச்சி பொங்க தெரிவிக்கின்றனர் அரசு பள்ளி மாணவ மாணவியர். மேலும் ஏழை எளிய மாணவர் களுக்கு கல்வி மட்டும் அல்ல அவர்களது உடல் நலத்திலும் அக்கறை காட்டுவோம் என்பதை நிரூபித்துள்ள தமிழக முதல்வருக்கும் அரசிற்கும் நன்றி பாராட்டியுள்ளனர்.
Next Story