பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்திய 611 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

X
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 611 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காரில் வந்த நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த லிங்கராஜ் (வயது 35), வட்டமுத்தாம்பட்டியை சேர்ந்த ஜக்குபாய் (52) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் லிங்கராஜ் மளிகைக்கடை நடத்தி வருவதும், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து கடைகளுக்கு விற்று வந்ததும் தெரிந்தது. இதையடுத்து லிங்கராஜ், ஜக்குபார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்்களிடமிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story

