ஜோலார்பேட்டை ரயிலில் பயணம் செய்த பெண்ணின் கழுத்தில் இருந்து 6.1/4 சவரன் பறிப்பு!
Tirupathur King 24x7 |29 July 2024 7:56 AM GMT
ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் ரயிலில் பயணம் செய்த பெண்ணின் கழுத்தில் இருந்து 6.1/4 சவரன் தங்கநகை பறிப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் ரயிலில் பயணம் செய்த பெண்ணின் கழுத்தில் இருந்து 6.1/4 சவரன் தங்கநகை பறித்து கொண்டு ஓடிய வாலிபரை ரயில்வே பாதுகாப்புபடை போலீசார் மடக்கி பிடித்து இருப்புப்பாதை போலீசாரிடம் ஒப்படைத்தனர்* சேலம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி சித்ரா (37) என்பவர் தனது குடும்பத்துடன் திருப்பதி கோவில் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் s3 பெட்டியில் சேலம் சென்றுள்ளனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடையில் வண்டி நின்றதும் வெகுநேரம் நோட்டமிட்ட வாலிபர் சுமித்ரா கழுத்தில் இருந்த தாலிஜெயின் உட்பட 6 1/4 சவரன் தங்க நகையை பறித்து சென்றள்ளார். அப்போது அதிர்ச்சி அடைந்த சித்ரா கத்தி கூச்சலிட்டதும் ரயில்வே நிலையத்தில் நடைமேடையில் இருந்த பயணிகள் வாலிபரை மடக்கி பிடிக்க தூரத்தி சென்றனர் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரயில்வே பாதுகாப்புப்படை போலிசார் உதவி ஆய்வாளர் திஜீத், போலீஸ் குமரேசன் ஆகியோர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அந்த நபரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த நசிர் என்பவரின் மகன் ஆனஸ் (30) என்பதும் இந்த வாலிபர் மீது ஏற்கனவே கோவை, கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இந்த வாலிபர் மீது ஜோலார்பேட்டை இருப்புப்பாதை போலீசாரிடம் அந்த வாலிபரை பாதுகாப்பு படை போலீசார் ஒப்படைத்த நிலையில் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story