ஏப்ரல்-ஜூன்-ல் முறைகேடான ரயில் பயணம்.ரூ.6.18 கோடிக்கு மேல் அபராதம் வசூல்.
ஏப்ரல்-ஜூன்-ல் முறைகேடான ரயில் பயணம்.ரூ.6.18 கோடிக்கு மேல் அபராதம் வசூல். கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்பு அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய ரயில்களிலும் , ரயில்வே வளாகங்களிலும் வழக்கமான சோதனைகளை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற சோதனைகளின் போது, டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் நபர்கள், ஒழுங்கற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத சாமான்கள் போன்றவற்றைக் கண்டறிந்து அதற்கேற்ப அபராதம் விதிக்கின்றனர். சேலம் கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புக் குழுக்கள் ஏப்ரல் - ஜூன், 2025 இல் 43,524 டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த வழக்குகளைக் கண்டறிந்து, குற்றவாளிகளிடமிருந்து ரூ.3,79,87,053/- அபராதத் தொகையை வசூலித்தனர். மேலும்,ஏப்ரல் - ஜூன் -2025 காலகட்டத்தில் 40,563 முறைகேடான பயண வழக்குகள் கண்டறியப்பட்டு பயணிகளிடமிருந்து ரூ.2,37,88,917/- அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல், முன்பதிவு செய்யப்படாத சாமான்கள் / அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான சாமான்களை எடுத்துச் சென்றதாக 208 வழக்குகள் பதிவு செய்தனர். இதுபோன்ற அபராதங்கள் மூலம் 6.18 கோடி வரை வசூல் ஆனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story




