கரூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழை. 618.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழை. 618.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழை. 618.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு. பெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தை புரட்டி போட்டது. புயல் கடந்த போது ஏற்பட்ட கன மழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் நீரில் தத்தளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், குறிப்பாக கரூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்டும் தமிழக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை முதல் லேசாக துவங்கிய மழை நள்ளிரவு 12 மணிக்கு கனமழையாக மாறியது. பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கரூரில் 16.20 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 11.40 மில்லி மீட்டர், அணைப்பாளையத்தில் 15.00 மில்லி மீட்டர், க.பரமத்தியில் 11.00 மில்லி மீட்டர், குளித்தலையில் 55.40 மில்லி மீட்டர், மாவட்டத்தில் அதிகபட்சமாக தோகைமலையில் 128.60 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 103.00 மில்லி மீட்டர், மாயனூரில் 84.40மி.மீ, பஞ்சபட்டியில் 95.00 மில்லி மீட்டர், கடவூரில் 26.00 மில்லி மீட்டர், பாலவிடுதியில் 40.00 மில்லி மீட்டர், மைலம்பட்டியில் 32.00 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் 618.00 மில்லி மீட்டர் எனவும், இதனுடைய சராசரி அளவு 51.50 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story