திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 62வது ஆண்டு மகாசபை கூட்டம்

திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 62வது ஆண்டு மகாசபை கூட்டம்
திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 62வது ஆண்டு மகாசபை கூட்டம்
திருச்செங்கோடு லாரி உரிமையாளர் சங்கத்தின் 62 வது மகாசபை கூட்டம் திருச்செங்கோடு வேலூர் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கேபிஆர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் மோகன்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார் சங்கத்தின் பொருளாளர் செல்வராஜு 202324 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை வாசித்தார் சங்கத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் சின்னுசாமி தீனதயாளன் கார்த்திகேயன் குமரவேல் மாதேஸ்வரன் நந்தகுமார் பிரபு ரமேஷ் சேகர் செங்கோட்டையன் சுப்ரமணி தாமரைக்கண்ணன் வெற்றிவேல் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக அகில இந்திய மோட்டார் காங்கிரஸின் சேர்மன் சண்முகப்பா கலந்துகொண்டு லாரி தொழிலின் தற்போதைய பிரச்சனைகள் மற்றும் அதை தீர்க்கும் வழிமுறைகளையும் தொழில் வளர்ச்சி குறித்தும் பேசினார். திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க மூத்த உறுப்பினர் சோமசுந்தரம் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் மோகன் குமார் திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் லட்சுமணன் சங்கத்தின் சட்ட ஆலோசகர் பரணிதரன் வாழ்த்துரை வழங்கினார்கள். திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்குகளில் டீசல் அதிக அளவில் பிடித்த முதல் பத்து உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இதேபோல் ஆட்டோ மொபைல் மற்றும் ஆயில் பிரிவுகளில் அதிகளவு கொள்முதல் செய்த முதல் பத்து உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சங்க உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களின் குழந்தைகள் 10மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கே பி ஆர் மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது நமது சங்கத்தின் மூலமாக நமக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் கொள்முதல் செய்து நாமும் பயனடைந்து சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருக்க உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் நம் சங்கம் வலிமையானதாக இருந்தால்தான்நம் தொழிலுக்கு பாதுகாப்பு கிடைக்கும் சங்கத்திற்காக நாமும் நமக்காக சங்கமும் செயல்படுகிறது என்பதை உணர வேண்டும். திருச்செங்கோடு ஈரோடு ரோட்டில் உள்ள நமது சங்கத்தின் இடத்தில் திருமணம் மண்டபம் கட்டப்பட உள்ளது திருச்செங்கோடு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரிங் ரோடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பதினைந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது சங்கத்தின் உப செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்
Next Story