விழுப்புரம் மாவட்டத்தில் குறைகேட்பு கூட்டம் 626 மனுக்கள் குவிந்தன
Villuppuram King 24x7 |1 Oct 2024 3:17 AM GMT
குறைகேட்பு கூட்டம் 626 மனுக்கள் குவிந்தன
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 626 மனுக்கள் பெறப்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம், கலெக்டர் பழனி தலைமையில் நேற்று நடந்தது.கூட்டத்தில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, தொடர்புடைய துறை அதிகாரிகள், இந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறித்த காலத்திற்கு தீர்வுகாண அறிவுறுத்தினார்.கூட்டத்தில் பல்வேறு துறை சார்பில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளாக 626 மனுக்களை அளித்தனர்.டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, சப் கலெக்டர் முகுந்தன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், பிற்படுத் தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, கலால் உதவி ஆணையர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Next Story