மாவட்டத்தில் 626 போலீசார் பாதுகாப்பு
Kallakurichi King 24x7 |15 Jan 2025 4:21 AM GMT
பாதுகாப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் பண்டிகையொட்டி 626 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. பொங்கல் பண்டிகை நாட்களில் கிராமங்களில் மஞ்சு விரட்டு உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.எஸ்.பி., ரஜத்சதுர்வேதி உத்தரவின்பேரில் இன்று (15 ம் தேதி) மாட்டு பொங்கல், நாளை (16ம் தேதி) காணும் பொங்கல் நாட்களில் எவ்வித அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் காவல் துறை மூலம் பாதுகாப்பு பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், கோமுகி டேம், பெரியார் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தளங்கள், கோவில்கள், ஆற்றுத்திருவிழா, விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் சட்டம் -ஒழுங்கு பிரச்னைக்குரிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதில் ஏ.டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் 5 டி.எஸ்.பி.,க்கள், 19 இன்ஸ்பெக்டர்கள், 103 சப் இன்ஸ்பெக்டர்கள், 418 காவல் காவல் போலீசார், 80 ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 626 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story