சாத்தூர் பகுதியில் சுமார் ரூ.63. லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகளை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

சாத்தூர் பகுதியில் சுமார் ரூ.63. லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகளை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
X
சாத்தூர் பகுதியில் சுமார் ரூ.63. லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகளை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
சாத்தூர் பகுதியில் சுமார் ரூ.63. லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகளை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கிராம பகுதிகளில் சுமார் 63 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். சாத்தூர் அருகில் உள்ள சின்ன ஓடைப்பட்டி சங்கராபுரம் ராவுத்தன்பட்டி குமராபுரம் தோட்டிலோவான்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பகுதி நேர நியாயவிலைக்கடை பயணிகள் நிழற்குடை மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்ததுடன் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தயாராக இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழக வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். சின்ன ஓடைப்பட்டி கிராமத்தில் நியாயவிலைக் கடை தொடங்கி வைக்க வந்த அமைச்சரிடம் கிராம பொதுமக்கள் தங்களது கிராம மக்கள் பாதுகாப்பிற்கு சி சி டிவி கேமரா மற்றும் குழந்தைகள் முன் கல்வி பயில அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் அவர்களிடம் வருவாய்த்துறை அமைச்சர் செய்து தருவதாக வாக்குறுதியும் அளித்தார். இதேபோன்று பல்வேறு கிராமங்களிலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளையும் முன் வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் ராஜமாணிக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
Next Story