கரூர் அருகே சட்டவிரோத மது விற்பனை.இருவர் கைது. 63 மது பாட்டில்கள் பறிமுதல்.

கரூர் அருகே சட்டவிரோத மது விற்பனை.இருவர் கைது. 63 மது பாட்டில்கள் பறிமுதல்.
கரூர் அருகே சட்டவிரோத மது விற்பனை.இருவர் கைது. 63 மது பாட்டில்கள் பறிமுதல். அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்னிலையில் கரூர் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து கரூர் மாநகர காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்துவுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வியாழக்கிழமை கரூர் நகர பகுதி மற்றும் கரூர்-சேலம் சாலையிலும் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கரூர்- சேலம் சாலையில் செயல்படும் தனியார் மெஸ் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு இந்த விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கிய திரவியம் வயது 40 என்பவரை கைது செய்து அவரிடம் விற்பனைக்கு வைத்திருந்த 34 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல கரூர் நகர பகுதியில் அய்யங்கார் பேக்கரி அருகே சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 29 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இருவரிடம் இருந்து மட்டும் மொத்தம் 63 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story