*அரியலூரில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு பணியின் போது வீரமரணம் அடைந்தவர்களுக்கு 63 குண்டு முழங்க வீரவணக்கம்

X
அரியலூர், அக்.21- இந்தியா முழுவதும் பல்வேறு இன்னலான பணிகளுக்கிடையே வீரமரணம் அடைந்த 191 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் நினைவாக காவலர் வீரவ.ணக்க நாள் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில், 21.10.2025 இன்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இரா.முத்தமிழ்செல்வன் ( தலைமை இடம்), போலீஸ் துணை சூப்பிரண்டு சாலை இராம் சக்திவேல் (அரியலூர் உட்கோட்டம்) ரவிச்சந்திரன் (மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம்) மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஊர்க்காவல் படை திருச்சி சரக உதவி தளபதியும், ஜெயங்கொண்டம் கே ஆர் டி டிவிஎஸ் உரிமையாளருமான ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் பணியின் போது உயிர் நீத்த 5 போலீஸாரர்களின் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் சிவச்சந்திரன் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான ஆயுதப்படை போலீசார்கள் அரசு மரியாதையுடன் 63 குண்டுகள் முழங்க வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இந்த ஆண்டு அரியலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவலர்களின் பணியையும், அர்ப்பணிப்பையும் நினைவு கூர்ந்து அவர்களது குடும்பத்தினரிடம் சான்றிதழ் வழங்கினார். முடிவில் மறைந்த போலீஸார்களின் குடும்பத்தினருக்கு அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக விருந்து உபசரிப்பு நடைபெற்றது. நிகழ்ச்சியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ஆயுதப்படை போலீசார்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வீரமரணமடைந்த போலீஸார்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். வீர வணக்க நாளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா.சாஸ்திரி பேசும்போது :- எங்களுடன் பயணித்து போலீஸ் பணியில் உயிர் நீத்த போலீசார்கள் என்றும் எங்கள் நினைவில் இருப்பார்கள். காவல்துறை ஒரு குடும்பம் போன்றது. அதில் யாருக்கேனும் ஒரு இழப்பு ஏற்பட்டால் நாங்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம். காவலர் வீரவணக்க நாள் வரலாறு: அக்டோபர் 21ஆம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது, 1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் hot springs என்ற இடத்தில் சீனா ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைகள் (CRPF) உயிரிழந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 16,000 அடி உயரத்தில் அன்று வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை கடலலைகள் கண்ணுக்குத் தெரியும் இவ்விடத்திலிருந்து நாம் இன்று நினைவு கூறுகிறோம். கடற்கரை ஆனாலும் பனிமலை சிகரமான ஆளும் காவல் பணி இடர் நிறைந்தது. Lord Tennyson - ன் வார்த்தைகளில் சொல்ல போனால் Theirs not two reasons why Theirs to make reply Theirs but to do and die உறுதிமொழி: உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளைய உன் விடியலுக்கு இன்று நான் மடிய தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டு பிரிந்த காவல் குடும்பத்தினரின் எண்ணிக்கை 191. மடிந்த இவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி ஏற்று அவர்களின் வீர தியாகம் வீண் போகாது என்று இந்த காவலர் வீர வணக்க நாளில் உறுதிமொழி ஏற்போம். அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Next Story

