மாட்டு வண்டியில் 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார் சிலைகள் ஊர்வலம்

மாட்டு வண்டியில் 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார் சிலைகள் ஊர்வலம்
காரைக்குடியில் இருந்து நாச்சியார்புரத்திற்கு பிரதிஷ்டை செய்வதற்காக மாட்டு வண்டியில் 63 நாயன்மார்கள் மற்றும் 12 ஆழ்வார் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே நாச்சியார் புரம் பசு மடத்தில் ஆழ்வார் நாயன்மார்கள் சிலை பிரதிஷ்டை அக்.20 நடைபெறுகிறது. காரைக்குடி பர்மா காலனியில் உள்ள சிவானந்தா மஹாலில் ஆழ்வார் நாயன்மார்கள் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வேள்வி பூஜை, பாசுரம் நடந்தது.தொடர்ந்து தேவாரம் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை காரைக்குடியில் இருந்து சிலைகள் நாச்சியார்புரத்திற்கு மாட்டு வண்டிகள் மூலம் புறப்பட்டது. வரும் அக்.20 ஆம் தேதி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மாட்டு வண்டியில் சென்ற நாயன்மார்கள், ஆழ்வார் சிலைகளை வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Next Story