சார் பதிவாளரின் காரை பரிசோதித்த இலஞ்ச ஒழிப்புத்துறையினர்: கணக்கில் வராத கட்டு கட்டாக 6,35,500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை

சார் பதிவாளரின் காரை பரிசோதித்த இலஞ்ச ஒழிப்புத்துறையினர்: கணக்கில் வராத கட்டு கட்டாக 6,35,500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை
ஒசூர் அருகே சார் பதிவாளரின் காரை பரிசோதித்த இலஞ்ச ஒழிப்புத்துறையினர்: கணக்கில் வராத கட்டு கட்டாக 6,35,500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் சாய் கீதா, இவர் பத்திரப்பதிவு செய்பவர்களிடம் தொடர்ந்து இலஞ்சம் வாங்கி வருவதாக வந்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி இலஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான குழுவினர் நேற்றிரவு, தேன்கனிக்கோட்டையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த சாய் கீதா அவர்களின் காரை கௌதாளம் என்னுமிடத்தில் பரிசோதித்ததில் கணக்கில் வராத 6,35,000 ரூபாய் ரொக்கப்பணம் இருந்தது உறுதி செய்யப்பட்டதால், சாய் கீதாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவர் ஒசூர் சார் பதிவாளராக பணியாற்றியபோதும் இலஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக சிக்கியது குறிப்பிடதக்கது
Next Story