மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.64 கோடி நல உதவிகள் 

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.64 கோடி நல உதவிகள் 
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட 617 சுயஉதவிக்குழுவினருக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் தலைமையில், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, முன்னிலையில்  சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நேற்று  நடைபெற்றது.     நிகழ்ச்சியில் சுயஉதவிக்குழுக்களுக்கான வங்கிகடன் 447 சுயஉதவிக்குழுக்களில் உள்ள 6531 பயனாளிகளுக்கு ரூ.53.71 கோடி மதிப்பிலும், ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கான வங்கி பெருங்கடன் 162 சுயஉதவிக்குழுக்களில் உள்ள 2065 பயளாகளிகளுக்கு ரூ.10.50 கோடி மதிப்பிலும், மணிமேகலை விருது 8 பேருக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பில் காசோலையும் என மொத்தம் 8612 பயனாளிகளுக்கு ரூ.64 கோடி மதிப்பில் நலத்திட்ட உ தவிகள் வழங்கப்பட்டது.      சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு),    சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
Next Story