கோவை: வெளிநாட்டு வேலை மோசடி- ரூ. 64 லட்சம் பறிப்பு !

கோவை: வெளிநாட்டு வேலை மோசடி- ரூ. 64 லட்சம் பறிப்பு !
X
வெளிநாட்டு வேலை விளம்பரத்தை பார்த்து 64 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த பெண் கொடுத்த புகாரில் குஜராத்தை சேர்ந்த வாலிபர் கைது
கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் வேலை தேடும் முயற்சியில், முகநூலில் உக்ரைன், குரோஷியா, போலந்து, செர்பியா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்துள்ளார். விளம்பரதாரர்களைத் தொடர்புகொண்டபோது, அவர்கள் குறைந்த செலவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து, குஜராத்தைச் சேர்ந்த சன்ஸ்டீலர் பிரைவேட் லிமிடெட் என்ற போலி நிறுவனத்தின் பெயரில் அப்பெண்ணுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். அந்தப் பெண் பல்வேறு தவணைகளில் ரூ. 64 லட்சத்தை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். நீண்ட நாட்களாகியும் வேலை கிடைக்காததால், அப்பெண் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். ஆனால், ஐரோப்பிய நாடுகளுக்கான பணி அனுமதி, விசா, அழைப்பிதழ்கள் போன்றவற்றுக்காகப் பணம் செலுத்தப்பட்டதாகக் கூறி, பின்னர் தொடர்பைத் துண்டித்துள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், குஜராத்தைச் சேர்ந்த முகமது இர்பான் ஷேக் என்பவர் இமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை நேற்று கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story