போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.6.41 கோடி ஊக்கத் தொகை வழங்க அரசாணை
Chennai King 24x7 |12 Jan 2025 2:32 PM GMT
பொங்கலையொட்டி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.6.41 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக போக்குவரத்து செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது, பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களில் கடந்த ஆண்டு 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கு குறைவாக பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85 வீதமும், 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கு குறைவாக பணிபுரிந்தவர்களுக்கு ரூ.195 வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்தவர்களுக்கு ரூ.625 வீதமும் பொங்கல் “சாதனை ஊக்கத் தொகை” வழங்கப்படுகிறது. அந்த வகையில் 1 லட்சத்து 8,105 போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.6 கோடியே 41 லட்சத்து 18,000 சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொகை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
Next Story