பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.6.5 லட்சம் மதிப்பில் நோட்டு புத்தகம் பேனா தொகுப்பு எம்எல்ஏ வழங்கினார்

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.6.5 லட்சம் மதிப்பில் நோட்டு புத்தகம் பேனா தொகுப்பு எம்எல்ஏ வழங்கினார்
திருப்பத்தூர் மாவட்டம் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.6.5 லட்சம் மதிப்பில் நோட்டு புத்தகம் பேனா தொகுப்பு எம்எல்ஏ வழங்கினார் திருப்பத்துார் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தனது சொந்த செலவில் ரூ.6.5 லட்சம் மதிப்பில் நோட்டு புத்தகம், பேனா தொகுப்பு வழங்கினார். கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமை வகித்தார். கந்திலி ஒன்றிய சேர்மன் திருமதி திருமுருகன், திமுக ஒன்றிய செயலாளர்கள் மோகன்ராஜ், குணசேகரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ நல்லதம்பி கலந்துகொண்டு பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பேனா தொகுப்பு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் திருப்பத்துார் மாவட்டம் 34வது இடத்தை பிடித்தது.இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க மாவட்ட கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கி வருவதை ஒட்டி திருப்பத்துார் தொகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 350 க்கும் அதிகமாக பிளஸ்2 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் இலவச நோட்டு புத்தகம் பேனா மற்றும் உயர்கல்வி வழிகாட்டி கையேடு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் முழு கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைக்க வேண்டும். இது தங்களுக்கு மட்டுமின்றி மாவட்டத்துக்கும் பெருமையாக அமையும் என்றார். இதில் திமுக மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன், துணைத் தலைமை ஆசிரியர் இந்திராணி, பிடிஏ தலைவர் கோவிந்தராஜ், கல்வி மேலாண்மை குழு தலைவர் கலையரசி குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஆசிரியர் முல்லைப்பாரி நன்றி கூறினார். இதேபோல் சுந்தரம்பள்ளி, பெரியகண்ணாலபட்டி, குனிச்சி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பேனா தொகுப்பினை எம்எல்ஏ வழங்கினார்.
Next Story