பேராவூரணி உட்கோட்டத்தில் ரூ.65 லட்சத்தில் அமைக்கப்பட்ட சாலையை தரக்கட்டுப்பாட்டு   பொறியாளர்கள் ஆய்வு

பேராவூரணி உட்கோட்டத்தில் ரூ.65 லட்சத்தில் அமைக்கப்பட்ட சாலையை தரக்கட்டுப்பாட்டு   பொறியாளர்கள் ஆய்வு
X
ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி உட் கோட்டத்தில் ரூ.65 லட்சத்தில் அமைக்கப்பட்ட சாலையினை தரக்கட்டுப்பாட்டு அலகு பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.  தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திற்குட்பட்ட, பேராவூரணி உட் கோட்டத்தை சேர்ந்த காலகம் - கரம்பக்காடு சாலை பொதுமக்களின் வசதிக்காக  ஒருங்கிணைந்த சாலை உட் கட்டமைப்பு திட்டம் 2024-25 ன் கீழ் ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  சாலையின் ஓடு தளத்தை மேம்பாடு செய்து, புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.  புதிதாக அமைக்கப்பட்ட சாலையினை தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் செந்தில்குமார் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் தரக்கட்டுப்பாட்டு உதவிக் கோட்டப்பொறியாளர் ரேணுகோபால், உதவிப்பொறியாளர் விமல்குமார் ஆகியோர் சாலையின் அளவு, தரம் குறித்து நவீன கருவிகள் கொண்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். புதிதாக சாலை அமைக்கப்பட்டதால் காலம், கரம்பக்காடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Next Story