அரக்கோணம்:எக்ஸ்பிரஸ் ரயிலில் 6.5 கிலோ கஞ்சா பறிமுதல்

X
டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று மாலை சோதனை நடத்தினர். அப்போது பொதுப் பெட்டியில் ரயிலின் இருக்கைக்கு கீழே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூபாய் 3.25 லட்சம் என தெரிவித்துள்ளனர்.
Next Story

