ஆரணி பகுதியில் ரூ.65 லட்சம் மதிப்பில் ஊராட்சிமன்ற அலுவலகம், அங்கன்வாடி, நியாய விலைக்கடைகள் விழா.

ஆரணி பகுதியில் ரூ.65 லட்சம் மதிப்பில் ஊராட்சிமன்ற அலுவலகம், அங்கன்வாடி, நியாயவிலைக்கடைகள் திறப்பு விழா நடைபெற்றது.
ஆரணி பகுதியில் ரூ.65 லட்சம் மதிப்பில் ஊராட்சிமன்ற அலுவலகம், அங்கன்வாடி, நியாயவிலைக்கடைகள் திறப்பு விழா நடைபெற்றது. ஆரணி அடுத்த இராட்டிணமங்கலம் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றதில் ஆரணி எம்.பி, எம்.எஸ்.தரணிவேந்தன் திறந்து வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா அனைவரையும் வரவேற்றார். மாவட்டதுணைசெயலாளர் ஜெயராணிரவி, நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, ஒன்றியசெயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், மாமது, சுந்தர், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நகரபொறுப்பாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் ஒன்றியதுணைசெயலாளர்கள் குமரேசன், அன்புவெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் ஆரணி சட்டமன்ற தொகுதி, செய்யார் ஒன்றியத்தைச்சேர்ந்த மேல்மட்டைவிண்ணமங்கலம் கிராமத்தி்ல் ரூ.5லட்சம் மதிப்பில் உயர்மின்கோபுர விளக்கு துவக்கி வைத்தார். மேலும் புதுக்கோட்டை ஊராட்சியில் பகுதி நேர நியாய விலைக்கடையும், மேல்நகரம்பேடு கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய நியாய விலை கட்டிடத்தையும், நாவல்பாக்கம் கிராமத்தில் ரூ,16.55 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை ஆரணி எம்.பி, எம்.எஸ்.தரணிவேந்தன் திறந்து வைத்தார். ஆரணி மத்திய ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். செய்யார் வட்டாட்சியர் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story