கோவையில் 65.44 டன் வீட்டு கழிவுப் பொருட்கள் சேகரிப்பு !

கோவை மாநகராட்சியின் தூய்மை நடவடிக்கையில் 65.44 டன் கழிவுகள் அகற்றம்.
கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில், பழைய படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்ட பெரிய வீட்டு கழிவுப் பொருட்களை அகற்றும் நோக்கில் இரண்டு தின சிறப்பு சேகரிப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் மத்திய, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் மொத்தமாக 65.44 டன் கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், இத்தகைய சிறப்பு முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்றும், அதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. கூடுதல் தகவல்களுக்கு www.comc.gov.in மற்றும் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம்.
Next Story