பெரம்பலூரில் நேரலையில் பார்வையிட்டு 658 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.48.46 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகள்
உலக மகளிர் நாள் விழாவை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நேரடி வங்கிக்கடன் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் பெரம்பலூரில் நேரலையில் பார்வையிட்டு 658 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.48.46 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை வழங்கினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் நாள் விழா நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நேரடி வங்கிக்கடன் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்த நிகழ்வினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் த கே.என்.அருண் நேரு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த ஆதர்ஷ் பசேரா ஆகியோர் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நேரலையில் பார்வையிட்டு, *பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 658 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.48.46 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் போக்குவரத்துத்துறை அமைச்சர் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைத்து மகளிர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய பொற்கால ஆட்சியில் மகளிர் நலன் காக்க எண்ணிலடங்கா திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட வருகின்றது. இன்று தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கி நேரடி கடன் உதவி வழங்கப்படுகின்றது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதன் முதலாக மகளிர் சுய உதவிக்குழுவை ஏற்படுத்தினார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, காவல்துறையில் முதன்முதலாக பெண் காவலர்களை நியமித்தல், முத்துலட்சுமி திருமண நிதியுதவி திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தினார். முத்தமிழ் அறிஞரின் வழியில் செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதிய விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என பெண்கள் பாதுகாப்புக்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். வாழ்வில் யாரையும் எதிர்பார்க்காமல் பெண்கள் சுயமரியாதையுடன், பொருளாதாரத்தில் சிறந்து, சுயதொழில் செய்து முன்னேறிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் பெண்கள் நலன் காக்கும் அரசாக இந்த அரசு இருக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டார்கள். பின்னர், மாவட்ட காவல்துறையில் பெண்களுக்காக சிறப்பாக பணியாற்றிய முதல்நிலை காவலர் (பெண் காவலர்) திருமதி. க.தேன்மொழி அவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், 2023-2024 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சந்தியா, தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி சௌமியா, சில்லக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி கபிலா ஆகியோர்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கத்துடன் பாராட்டுச் சான்றிதழ்களையும், 2023-2024 ஆம் ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ரம்யா, செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ரதிமீனா, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி பாவனா ஆகியோர்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கத்துடன் பாராட்டுச் சான்றிதழ்களையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் சிறப்பாக பணியாற்றிய பாதுகாப்பு அலுவலர் தி.முத்துசெல்வி சிறப்பாக பணியாற்றிய அ மேட்டூர் அங்கன்வாடி மைய பணியாளர் திருமதி.சுமதி அவர்கள், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிய மருத்துவர் கலா அவர்கள் ஆகியோர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு குறும்பட போட்டியில் முதலிடம் பெற்ற திரு.விக்னேஷ் (மடந்தையின் காதலன்) அவர்களுக்கு ரூ.15,000 ரொக்க பணத்தினையும், இரண்டாமிடம் பெற்ற திரு.தமிழ் அமுதன் (கல்விக்கான தேடல்) அவர்களுக்கு ரூ.10,000 ரொக்க பணத்தினையும், மூன்றாமிடம் பெற்ற பைசல் அகமது (கனவை கலைக்காதே) அவர்களுக்கு ரூ.5,000 ரொக்க பணத்தினையும், மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற 20 மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வழங்கினார்கள். இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், நகர்மன்றத்தலைவர் அம்பிகா இராஜேந்திரன், அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், நகர்மன்றத் துணைத் தலைவர் திரு. து.ஆதவன், மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர்கள் கார்த்திக்கேயன், ரேச்சர் கலைச்செல்வி, சிவக்குமார், முருகதாஸ், பெர்லினா, விற்பனை சங்க மேலாளர் சங்கர் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story





