சீலநாயக்கன்பட்டியில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது ரூ.6,620 பறிமுதல்.

சீலநாயக்கன்பட்டியில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது ரூ.6,620 பறிமுதல்.
சீலநாயக்கன்பட்டியில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது ரூ.6,620 பறிமுதல். கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பகுதியில் பணம்வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் தர்மலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 4-ம் தேதி காலை 8 மணி அளவில், சீலநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள கன்னிமார் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, தங்கவேல், சண்முகம், குமார், சின்னுசாமி உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்து இவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் ரூபாய் 6,620 ஐயும் பறிமுதல் செய்தனர். ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிறகு அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தென்னிலை காவல்துறையினர்.
Next Story