கழுவந்தோண்டி கரைமேடு முதல் உத்திரக்குடி வரை 6.77 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம் எல் ஏ

X
அரியலூர், ஜூன்.8- கழுவந்தோண்டி கரைமேடு முதல் உத்தரங்குடி வரை 6.77 லட்சம் மதிப்பீட்டில் நடை அமைக்கும் பணி இணைங்கொண்டம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூபாய் 6.77 லட்சம் மதிப்பீட்டில் கரைமேடு முதல் உத்திரக்குடி வரை மெட்டல் சாலை அமைக்கும் பணியினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க. கண்ணன் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகானந்தம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம், பொறியாளர் குமார், ஒன்றிய நிர்வாகி சிவப்பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

