தமிழ்நாடு கிராம வங்கியின் 677வது கிளை திறப்பு – ஆட்சியர் க.இளம்பகவத்

X
தூத்துக்குடியில் தமிழ்நாடு கிராம வங்கியின் 677வது கிளை திறப்பு – மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு கிராம வங்கியின் 677வது புதிய கிளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசும் போது, ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு கிராம வங்கி கிராமப்புற மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிச் சேவைகள் மற்றும் கடனுதவிகளை வழங்கி வருகிறது. வங்கிகள் கடன் வழங்குவதில் மட்டுமல்ல, கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு மக்களிடமும் இருக்க வேண்டும் என்றார். அதிகமான கடன்களை வழங்கி, புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்து, கிராம மக்களுக்கு நிதிச் சேவைகள் எளிமையாக கிடைக்க வங்கிகள் முயற்சி செய்ய வேண்டும் என்றும், மக்கள் வங்கிச் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், பொது மேலாளர்கள் கண்ணன் பொன்னுராமன், குமார், வட்டார மேலாளர் சுதர்சன், கிளை மேலாளர் சந்தானசெல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

