விருத்தாசலத்தில் எல்ஐசி நிறுவனத்தின் 68 வது ஆண்டு விழா

விருத்தாசலத்தில் எல்ஐசி நிறுவனத்தின் 68 வது ஆண்டு விழா
முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்
விருத்தாசலம் எல்ஐசி அலுவலகத்தில் எல்ஐசி நிறுவனத்தின் 68 வது ஆண்டு விழா நடந்தது. கிளைத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். செயலாளர் செல்வம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன் முகவர்களுக்கான விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து, வாழ்த்தி பேசினார். இதில் ஜெயபால், ஆறுமுகம், மணி, ராதாகிருஷ்ணன், கனகசபை, ரஜினி, காந்திமதி, சசிகலா, அரசியலங்குமரி, செஞ்சி ராஜன், சுப்பிரமணியன், பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story