கிடாரி கன்றுடன் ரூ.68 ஆயிரத்திற்கு காங்கேயம் இன பசுமாடு விற்பனை

கிடாரி கன்றுடன் ரூ.68 ஆயிரத்திற்கு காங்கேயம் இன பசுமாடு விற்பனை
X
பழைய கோட்டை மாட்டுத்தாவணையில் கிடாரி கன்றுடன் ரூ.68 ஆயிரத்திற்கு காங்கேயம் இன பசுமாடு விற்பனை
நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டு தாவணியில் காங்கேயம் இன மாட்டு சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் காங்கேயம் இன மயிலை, செவலை பசு மாடுகள், பூச்சி காளைகள், இளங்கன்றுகள் என மொத்தம் 45 மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதிகபட்சமாக கிடாரி கன்றுடன் காங்கேயம் இன மயிலை பசு மாடு ரூ.68 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் நேற்று ஒரே நாளில் 24 காங்கயம் இன மாடுகள் மொத்தம் ரூ.9 லட்சத்திற்கு விற்பனை ஆனது.
Next Story