கோவை: மாநகரில் கஞ்சா விற்பனை: 68 வயது மூதாட்டி கைது

X
கோவை மாநகர பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நடந்த சோதனையில், ரஹமத் சந்திரா (வயது 68) என்ற மூதாட்டி, கல்லூரி மாணவர்களுக்கே நேரடியாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த சோதனையில் 14 கிலோ கஞ்சா, ரூ.4,000 பணம் மற்றும் ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

