கரூர் -சம உரிமைக்கான தனித்த ஆளுமை இமானுவேல் சேகரன் 68 வது நினைவு நாள்,

கரூர் -சம உரிமைக்கான தனித்த ஆளுமை இமானுவேல் சேகரன் 68 வது நினைவு நாள்,
கரூர்-சம உரிமைக்கான தனித்த ஆளுமை இமானுவேல் சேகரன் 68 வது நினைவு நாள், சுதந்​திரப் போராட்டத் தியாகியும் ராணுவ வீரருமான இமானுவேல் சம உரிமை​களுக்கான இயக்கத்தின் ஆளுமை​களில் தனித்து​வ​மானவர். 1924 அக்டோபர் 9 அன்று இமானுவேல் பிறந்​தார். காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து ‘வெள்​ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றுச் சிறைத் தண்டனையையும் அனுபவித்​தார். இமானுவேல், ஒடுக்​கப்​பட்டோர் மீது ஆதிக்கச் சாதியினர் ஏவுகின்ற தீண்டா​மை​யையும் வன்முறை​களையும் எடுத்​துரைத்​தார். 1953 ஏப்ரல் 14இல் ராமநாத​புரத்தில் ஒடுக்​கப்​பட்டோர் எழுச்சி மாநாட்டை நடத்தினார்.1957ல் செப்டம்பர் 11 அன்று இரவு 9 மணிக்கு பரமக்​குடியில் சிலரால் இமானுவேல் கொல்லப்​பட்​டார். ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலராக இருந்ததால் ஆண்டுதோறும் அவரது நினைவு நாளை குருபூஜை நாளாக அனுசரித்து வருகின்றனர் இதன் அடிப்படையில் கரூர் சர்ச் கார்னர் அருகே வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் நீலிமேடு பூபதி துரைசாமி தலைமையில் இமானுவேல் சேகரனார் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட தேவேந்திர குல உறவின்முறை மற்றும் நீதி மேடை துரை மணிவண்ணன்.மதன் மூர்த்தி தேவேஷ் பிரகாஷ் கௌதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.
Next Story