அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6.85 லட்சம் மோசடி செய்தவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6.85 லட்சம் மோசடி செய்தவர் கைது
X
திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, மக்கள் நல பணியாளரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்தவர் கைது, மற்றொருவருக்கு வலை வீச்சு
மதுரை, வாடிப்பட்டி, ஊத்துக்குழியை சேர்ந்த மக்கள் நல பணியாளர் ஆதிமுத்து(53) இவரது மகனுக்கு திண்டுக்கல், கோபால்பட்டியை சேர்ந்த மாமத்தி(44) புதுக்கோட்டை, கதவம்பட்டியை சேர்ந்த கிருபாகரன் ஆகியோர்'வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி பல தவணைகளாக இருவரும் வங்கிக் கணக்கில் ரூ.6.85 லட்சம் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ஆதிமுத்து மாவட்ட S.P.பிரதீப் அவர்களிடம் புகார் அளித்ததன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு DSP.குமரேசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து மாமத்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருபாகரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story