கோவையில் ரூ.69,498 கோடி வங்கி கடன் இலக்கு அறிவிப்பு - கலெக்டர் பவன்குமார் தகவல்

கோவையில் ரூ.69,498 கோடி வங்கி கடன் இலக்கு அறிவிப்பு -  கலெக்டர் பவன்குமார் தகவல்
X
கோவை மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தில் கலெக்டர் பவன்குமார் 2025-26 நிதியாண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட வங்கி கடன் திட்டத்தை வெளியிட்டார்.
கோவை மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தில் கலெக்டர் பவன்குமார் 2025-26 நிதியாண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட வங்கி கடன் திட்டத்தை வெளியிட்டார். இத்திட்டத்தின் அடிப்படையில், ரூ.69,498.24 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயத்துக்கு ரூ.27,730 கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.39,774 கோடி, பிற முன்னுரிமைத் துறைகளுக்கு ரூ.1,994 கோடி என ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன், நபார்டு வங்கி துணை பொது மேலாளர் அன்பரசு, தாட்கோ மாவட்ட மேலாளர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story