அக்காள், தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

அக்காள், தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
சேலம் கோர்ட்டில் தீர்ப்பு
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள மட்டம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற 9 மற்றும் 7 வயதுடைய அக்காள், தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் போலீசார் தரப்பில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கோவிந்தராஜிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
Next Story