சேர்வைக்காரன் பட்டியில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ.
Karur King 24x7 |26 Aug 2024 4:12 AM GMT
சேர்வைக்காரன் பட்டியில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ.
சேர்வைக்காரன் பட்டியில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, முள்ளிப்பாடி ஊராட்சியில், சேர்வைகாரன்பட்டி பகுதியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழல் குடையை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கடவூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், ஊராட்சி மன்ற தலைவர் நீலா வேல்முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, திமுக கிளை செயலாளர் செந்தில், திமுக கட்சி நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள்,ஊராட்சி சுகாதார பணியாளர்கள்,ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேருந்து நிழற்குடையை திறந்து வைத்த எம்எல்ஏவுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொன்னாடை மற்றும் சால்வை அணிவித்து கௌரவித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ஊராட்சி மன்றம் சார்பில் நன்றி தெரிவித்தனர்.
Next Story