வீடுபுகுந்து பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு : வாலிபர் கைது!

X
தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே உள்ள சூரன் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் மனைவி வாணி (56), இவர் நேற்று மதியம் தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது வீட்டுக்குள் நுழைந்து ஒரு வாலிபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றுவிட்டாராம். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். இந்த சம்பவம் குறித்து எட்டையபுரம் காவல் நிலையத்தில் வாணி புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் எட்டையாபுரம் சுரைக்காய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் சுடலைமுத்து (23) என்பவர் நகை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவர் பறித்துச் சென்ற 7 பவுன் நகையை மீட்டனர். மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

