கரூரில்,, கொடூர செயலில் ஈடுபட இருந்த 7- பேர் ஆயுதங்களுடன் கைது.

கரூரில்,, கொடூர செயலில் ஈடுபட இருந்த 7- பேர் ஆயுதங்களுடன் கைது.
கரூரில்,, கொடூர செயலில் ஈடுபட இருந்த 7- பேர் ஆயுதங்களுடன் கைது. கரூர் மாவட்டம், ராயனூர், பழனிவேல் நகரைச் சேர்ந்த முகேஷ் (எ) ராமசுப்பிரமணி என்பவர், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, திருமாநிலையூரை சேர்ந்த ஷோபனா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு, மேற்கண்ட விலாசத்தில் வசித்து வந்தார். சோபனாவின் வீட்டில் அவ்வப்போது தங்கி வந்த அவரது தோழியான ரம்யா என்பவருக்கும், அருகிலுள்ள தொழில்பேட்டையைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததால், விஜயின் குடும்பத்தினருக்கும், சோபனாவிற்கும் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி பிரச்சனை ஏற்பட்டு தாந்தோணி மலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தப் பிரச்சினையை மனதில் வைத்துக் கொண்டு, சோபனாவின் கணவர் முகேஷ் என்கிற ராமசுப்பிரமணி விஜயின் உறவினர்களை பழிவாங்கும் எண்ணத்துடன் தனது வீட்டில் அரிவாள், கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ராமசுப்பிரமணி வீட்டில் சோதனை மேற்கொண்டு ஆயுதங்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆலோசனை மற்றும் உத்தரவின் பேரில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் ராமசுப்பிரமணியிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த தகவலின் படி அவரது கூட்டாளிகளான நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் சக்கரவர்த்தி, திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பெரிய கோபால், திருப்பூரைச் சேர்ந்த ஒட்டக்காது செந்தில் என்கிற சின்னசாமி, ஈரோடு மாவட்டம் யுவராஜ், மூர்த்தி, கரூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து நடைபெற இருந்த பெரும் அசம்பாவிதத்தை தடுத்துள்ளனர். மேலும் இவர்களிடமிருந்து இரண்டு கை துப்பாக்கிகள் ஆறு துப்பாக்கி தோட்டாக்கள் பல்வேறு விதமான அறிவாள் மற்றும் கத்திகள் 5-ந்தும் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பான விசாரணையின் போது, தப்பி ஓடிய முகேஷ் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததால் கால் முறிவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை தமிழக முழுவதும் ஆயுத பூஜை கொண்டாட இருக்கும் சூழலில், குற்றவாளிகள் ஆயுதத்தை பயன்படுத்தி பெரிய அளவிலான குற்றத்தை நிகழ்த்தும் முன் தடுத்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story