சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7ஆண்டு சிறை தண்டனை!
Thoothukudi King 24x7 |29 Dec 2024 5:05 AM GMT
11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதிவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி முத்தையாபுரம் சுபாஷ்நகரைச் சேர்ந்த மேகநாதன் (72) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் நேற்று குற்றவாளியான மேகநாதன் என்பவருக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 4 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் ரபிலாகுமாரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
Next Story