கோவை: பிளம்பர் கொலை வழக்கில் 7 பேர் கைது !
Coimbatore King 24x7 |13 Jan 2025 8:44 AM GMT
கோவை,வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த பிளம்பர் இன்பரசன் கொலை வழக்கில் ஏழு பேர் கைது.
கோவை,வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த பிளம்பர் இன்பரசன் கொலை வழக்கில், முன்விரோதம் காரணமாக சுபாஷ் என்பவர் தலைமையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 8-ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்ற இன்பரசனை சுபாஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் வழிமறித்து வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த சுபாஷ் உட்பட 7 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கோவையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தனர்.சுபாஷ்,ஆகாஷ்,கௌதம்,நிஷாந்த்,நாகராஜ்,ஆர்த்தி மற்றும். 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள்.கைது செய்யப்பட்டவர்களில் சுபாஷ் மற்றும் ஆகாஷ் போலீசாரை கண்டு தப்பி ஓட முயன்றதில் காயமடைந்தனர்.இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story