கடவூர் அருகே இருதரப்பினரிடையே தகராறு: 7 பேர் மீது வழக்கு பதிவு

X

கடவூர் அருகே இருதரப்பினரிடையே தகராறு: 7 பேர் மீது வழக்கு பதிவு
இருதரப்பினரிடையே தகராறு: 7 பேர் மீது வழக்கு பதிவு கடவூர் தாலுகா சிந்தாமணிப்பட்டி பெட்ரோல் பங்க் முன்பு தங்கராசு மகள் மகிமாவை பார்க்க வந்த தாந்தோணி மலையைச் சேர்ந்த துளசிசுதர்சன், விஷால் ஆகிய இருவரும் கடந்த 24 ஆம் தேதி வந்துள்ளனர். அங்கு இருதரப்பிலும் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இருதரப்பை சேர்ந்த தங்கராசு மற்றும் துளசி சுதர்சன் அளித்த புகாரின் பேரில் 7 பேர் மீது சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்றைய முன் தினம் வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story