ஆம்பூர் அருகே 7 கிராம மக்கள் ஒன்றிணைந்து வெகுவிமர்சையாக நடத்தி ஸ்ரீ சுயம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் பூங்கரக மாசிப்பெருந்திருவிழா.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 7 கிராம மக்கள் ஒன்றிணைந்து வெகுவிமர்சையாக நடத்தி ஸ்ரீ சுயம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் பூங்கரக மாசிப்பெருந்திருவிழா. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சுயம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை ஆண்டுதோறும் மாசி மாத முதல் வாரத்தில், பெரியாங்குப்பம், விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், கன்னடிகுப்பம், சோலூர், ஆலாங்குப்பம், உள்ளிட்ட 7 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்துவது வழக்கம் , அதன்படி இந்த ஆண்டு, மாசி மாத முதல் வாரத்தில், ஸ்ரீ சுயம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலய பெருந்திருவிழா இந்த வாரம் நடைப்பெற்றது, கடந்த இரண்டு தினங்களாக சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பக்தர்கள் பொங்கலிட்டும், கூழ்வார்த்தும் வழிப்பட்ட நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான பூங்கரம் எடுக்கும் விழா இன்று நடைப்பெற்றது, இந்த பூங்கரகம் எடுக்கும் விழாவில் பெரியாங்குப்பம் கிராம மையப்பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்திலிருந்து, சாமுண்டீஸ்வரி அம்மனை பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலகமாக சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் வரை ஊர்வலகமாக கொண்டுவந்தனர், அப்பொழுது பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற பூங்கரகத்தின் மீது உப்பு,மிளகு, தூவி, வழிப்பட்டனர்.. அதனை தொடர்ந்து பூங்கரகம் பக்தர்களின் கோஷத்துடன் கோவிலை சென்றடைந்தது.. இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்..
Next Story



