ஆலங்குளம் அருகே பிடிபட்ட 7அடி நீள மலை பாம்பு

ஆலங்குளம் அருகே பிடிபட்ட 7அடி நீள மலை பாம்பு
X
7அடி நீள மலை பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் சிவன் கோயில் அருகே இன்று மலை பாம்பு ஒன்று கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்த அருகில் இருந்தவர்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசந்தர் தலைமையில் சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன், சாமி, திலகர், வின்பிரட் ஆகிய வீரர்கள் விரைந்து சென்று பதுங்கி இருந்த சுமார் 7 அடி நீள மலை பாம்பை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களை வெகுவாக பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story